தந்தை கண்டித்ததால் மன உளைச்சலில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருநெல்லி கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரி அவரது வீட்டில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது தந்தை பழனிசாமி படிக்காமல் என் செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கிறாய் என கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த புவனேஸ்வரி விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த புவனேஸ்வரியை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.