Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நா மட்டும் ஏன் இருக்கணும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் மீனாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சில மாதங்களுக்கு முன்பாக கைலாசகிரி மலையில் இருக்கும் குளத்தில் மீனாட்சியின் குழந்தைகள் இரண்டு பேர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து துக்கம் தாங்காமல் அவரது கணவரும் ரயில் நிலையம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மீனாட்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

Categories

Tech |