மன உளைச்சலில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள திருமுக்கூடலூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமாருக்கு அப்பகுதியில் இருக்கும் ஒரு கோவிலில் வரி விரிப்பது தொடர்பாக சரியானபடி தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.