Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேலையை கிடைக்கவில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சியம்மன் கோவில் தெருவில் ஞானவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசு என்ற மகன் இருந்துள்ளார். இவர் பி.காம் படித்து முடித்த பட்டதாரி. இந்நிலையில் கவியரசு வேலை தேடி வந்த நிலையில் வேலை எதுவும் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கவியரசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை பார்த்த உறவினர்கள் கவியரசுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கவியரசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கவியரசு தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |