Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஒழுங்கா வேலைக்கு போக மாட்டியா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அண்ணி திட்டியதால் மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாப்பேட்டை பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதிஷ் சரியாக வேலைக்கு செல்லாத காரணத்தினால் அவருடைய அண்ணி அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |