Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நான் உன் வீட்டிற்கு வரலாமா….? மேலாளருக்கு அடி உதை…. வைரலாகும் வீடியோ…!!

இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய மேலாளரை அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு காரமடையில் வசிக்கும் திருமணமான 25 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வருகின்றார். இதே பெட்ரோல் பங்கில் மேலாளராக வேலை பார்க்கும் ஒருவர் இந்த இளம் பெண்ணிற்கு செல்போனில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் மேலாளரை கண்டித்துள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மேலாளர் வீட்டில் நீ தனியாக இருக்கிறாயா, உனது கணவர் இல்லை என்றால் நான் உன் வீட்டிற்கு வரலாமா என ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அழைப்பை துண்டித்ததோடு, ஆடியோவை செல்போனில் பதிவு செய்து தனது கணவரிடம் காண்பித்து கதறி அழுதுள்ளார். இதனால் கோபம் அடைந்த இளம் பெண்ணின் கணவர் தனது உறவினர்களுடன் பெட்ரோல் பங்கிற்கு சென்று மேலாளரை அடித்து உதைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |