Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபச்சார அழகியுடன் உல்லாசமா…? மேலாளரின் கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

தனியார் நிறுவன மேலாளரை அடித்து கொன்ற வழக்கில் விபச்சார கும்பலை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் செல்லும் சாலையில் கடந்த 24ஆம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த சரவணம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் பேண்ட் பையில் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டையும், செல்போன்களும் இருந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இதற்கிடையில் இறந்த சாய் நாத் என்பவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது தலையில் காயம் ஏற்பட்டதால் இறந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் சாய்நாத்தை அடித்து கொலை செய்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தபோது, அவருடன் செல்போனில் விபச்சார கும்பல் ஒன்று பேசிய பதிவுகள் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது சரவணம்பட்டி பகுதியில் இருக்கும் ஒரு விபச்சார அழகியுடன் சாய்நாத் உல்லாசம் அனுபவித்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

இவரைப் பின்தொடர்ந்து வந்த அந்த விபச்சார கும்பலை சேர்ந்த 3 பேர் நகை, பணம் கேட்டு மிரட்டியதால் சாய்நாத் அதனை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த கும்பல் அவரை அடித்துக் கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் விபச்சார கும்பலை சேர்ந்த விக்னேஷ் தரணிதரன் ஆகிய 2 பேரை கைது செய்து, தலைமறைவான மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |