Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மரத்தில் கிடந்த அழுகிய மான்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

சிறுத்தைப்புலி மானை கொன்று மரத்தின் மீது வைத்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சேமுண்டி பகுதியில் இரண்டு புலிகள் உலா வந்ததால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அம்பலமூலா பகுதியில் இருக்கும் ஒரு மரத்தில் உயிரிழந்த மானின் உடல் கிடந்துள்ளது. இந்த மானை கொன்று வேட்டையாடிய புலி அதனை மரத்தில் வைத்து விட்டு சென்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சிறுத்தை புலி மானை வேட்டையாடி மரத்தில் வைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அழுகிய நிலையில் இருந்த மானை வனத்துறையினர் மீட்டு குழி தோண்டி புதைத்து விட்டனர். இதுகுறித்து வனச்சரகர் கணேசன் கூறும் போது சிறுத்தை புலி மானை வேட்டையாடி மரத்தில் வைத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |