மனைவி கண்டித்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் செல்வ பாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான சகாயராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கான்கிரீட் கலவை தயார் செய்யும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அந்தோணி செல்வம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் சகாயராஜ் வீட்டிற்கு பணம் கொடுக்காமல் அடிக்கடி மது அருந்தி விட்டு வந்துள்ளார். இதனை அவரது மனைவியான அந்தோணி செல்வம் கண்டித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல் மது அருந்தி விட்டு வந்த சகாயராஜை அந்தோணி செல்வம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சகாயராஜ் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்தோணி செல்வம், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவரை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சகாயராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சகாயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.