Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவி, மகளுடன் பேருந்தில் சென்ற அஜித்… வைரலாகும் கியூட் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் தனது மனைவி மற்றும் மகளுடன் பேருந்தில் பயணித்த புகைப்படம் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு  பிறந்த பெண் குழந்தைக்கு அனோஷ்கா என்று பெயர் வைத்தனர் . இதன்பின் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆத்விக் என்று  பெயர்  வைத்தனர் . நடிகர் அஜித் பொதுவாக பப்ளிசிட்டி விரும்பாதவர் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும்  மகளுடன் எந்தவித பப்ளிசிட்டியுமின்றி பேருந்தில் பயணம் செய்துள்ளார் . அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது .

Categories

Tech |