Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவி நடத்தையில் சந்தேகம்…. கணவனின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபர் ஒருவர் மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வைப்பூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்கோவிலூர் அருகாமையில் இருக்கும் குலதீபமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பவானி என்பவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பவானியின் நடத்தையில் சுரேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் கணவன் மனைவி இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியதோடு பவானி ஒரு மாதம் அவரின் தாய் வீட்டில் இருந்து விட்டு பின் குடும்பம் நடத்த வீட்டுக்கு வருவார் என இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து ஒரு மாதத்திற்குப் பின் சுரேஷ் பவானி அழைத்துச் செல்வதற்காக அவரின் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பவானி மற்றும் அவரது தாய் பூங்காவனம் ஆகிய 2 பேரையும் சத்தம் போட்டு சுரேஷ் அழைத்துள்ளார்.

ஆனால் யாரும் வெளியே வந்து பதில் சொல்லாத காரணத்தினால் கோபமடைந்த சுரேஷ் தான் வைத்திருந்த கத்தியால் பூங்காவனத்தை சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பவானியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தாய் மற்றும் மகளையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் சுரேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |