துருக்கியில் காப்பீட்டு தொகைக்காக தனது கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவனின் இரக்கமற்ற கொடுஞ்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018 ஜூன் மாதம் துருக்கியை சேர்ந்த 40 வயதான ஹக்கன் அய்சல் தனது கர்ப்பிணி மனைவி செம்பரா(32) என்பவருடன் முக்லா பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபலமான சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளார்.அங்கு இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர் .அதற்குப்பின் அய்சல் தமது மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டுளார் .இதனால் மனைவி சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார்.இதனைக் குறித்து விசாரணையில் தனது மனைவியை காப்பீடு தொகையான 40,865பவுண்டுகளுக்காக கொலை செய்தது வெளிவந்துள்ளது.
தனது கர்ப்பிணி மனைவியுடன் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அந்த மலைக்கு சென்ற அய்சல் சுற்றுவட்டாரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியை தள்ளி விட்டுள்ளார். இது மட்டுமின்றி மனைவி இறந்ததாக கூறி காப்பீட்டு நிறுவனத்தில் தொகையை வாங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் காப்பிட்டு நிறுவனமோ விசாரணை நடப்பதால் காப்பிட்டு பணம் வழங்க மறுத்துவிட்டது . நீதிமன்ற விசாரணையில் அய்சல் தனது மனைவி தாமாகவே கால் தவறி விழுந்ததாக கூறியுள்ளார். நீதிமன்றம் இதை ஏற்க மறுத்து விட்டது மேலும் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.தற்போது இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் கணவரின் இந்த கொடுஞ்செயல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது