ஹைதி நாடானது வறுமையில் தவிக்கும் போது அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அவரின் மனைவிக்கு விலையுயர்ந்த பங்களா ஒன்றை வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஹைதி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரோனி செலஷ்டினாவால் மீண்டும் கவனம் ஈர்கப்பட்டுள்ளது. இவர் தன் மனைவிக்கு கனடாவில் பங்களா ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த மாளிகையின் விலையானது 3.4 மில்லியன் டாலர்கள் ஆகும். ஒரு பக்கம் நாட்டிலுள்ள மக்கள் வறுமையில் தவிக்கும் போது செலஷ்டின் பங்களா ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளது பெரும் சர்ச்சைக்குரிய நிகழ்வாகும். இந்த சம்பவத்தினால் மக்கள் அவரை எதிர்த்து வருகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள செலஷ்டின் “தனக்கு கோழிப் பண்ணையில் இருந்து 60 மில்லியன் டாலர்கள் வருவதாகவும், FM நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் மேலும் எரிவாயு நிறுவனம் ஒன்றை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதனை குறித்து விசாரணை மேற்கொண்டவர்கள் கூறியதில் FM நிறுவனம் சில நாட்களாக மூட ப் பட்டிருப்பதாகவும் கோழிப்பண்ணை இன்னும் முழுமையாக கட்டப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கனடாவில் பங்களா வாங்கியது எப்படி என மக்களிடடையே கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ரோனி செல்ஷ்டின் “நான் யாருக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை என கூறியது” பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.