Categories
உலக செய்திகள்

அறைக்குள் நுழைந்த முன்னாள் கணவர்…. பார்த்ததும் பதற வைக்கும் வீடியோ…. மரண தண்டனை விதித்த நீதிபதி….!!

மனைவியை முன்னாள் கணவர் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Lhamo என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் இணையத்தில் நிகழ்ச்சிகளை நேரலை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் Lhamo ஒரு நிகழ்ச்சியை நேரலையில் தொகுத்து வழங்கினார். அப்போது Lhamo-ன் அறைக்குள் முன்னாள் கணவர் நுழைந்துள்ளார். இந்நிலையில் முன்னாள் கணவர் திடீரென Lhamo  மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த Lhamo 2 வாரங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

அதன்பின் Lhamo -ன் முன்னாள் கணவரான  Tang Lu காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்  Tang Lu மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதுபோன்று கொடூரமாக செயல்படும் நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

Categories

Tech |