Categories
தேசிய செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மனைவி, மாமியார் உள்பட 3 பேருக்கு நடந்த கொடூரம்…. கணவனின் வெறிச்செயல்….!!

குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் மற்றும் கொழுந்தியாளை அரிவாளால் வெட்டி கொலை செய்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராய்ச்சூர் புறநகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட யரமரஸ் கேம்ப் சாலையில் தொழிலாளி சந்தோபி வசித்து வந்தார். இவருக்கு வைஷ்ணவி மற்றும் ஆரதி என்ற 2 மகள்கள் இருந்தனர். இதில் வைஷ்ணவிக்கும், சாய் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு சாய் மற்றும் வைஷ்ணவி தனியாக வசித்து வந்தனர். அப்போது கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு ராய்ச்சூர் புறநகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வைஷ்ணவி சென்று விட்டார். அதன்பின் வைஷ்ணவியை பார்ப்பதற்காக சந்தோபி வீட்டிற்கு அவருடைய கணவர் சாய் வந்து இருந்ததாக தெரிகிறது. அங்கு இரவு வேளையில் மீண்டும் வைஷ்ணவிக்கும், சாய்க்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த சாய் வீட்டில் இருந்த அரிவாளால் வைஷ்ணவியை சரமாரியாக வெட்டினார். மேலும் மகளை காப்பாற்ற வந்த மாமியாரையும் சாய் வெட்டினார். அதுமட்டுமின்றி கொழுந்தியாள் ஆரதியையும் சாய் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனால் 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு வீட்டில் ஏற்பட்ட தகராறில் மாமியார், மனைவி மற்றும் கொழுந்தியாளை சாய் கொன்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கின்ற சாயை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |