மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பள்ளி கிராமத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் திடீரென கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த காளியப்பன் வீட்டிலிருந்த உருட்டு கட்டையை எடுத்து தனது மனைவியின் தலையில் பலமாக அடித்துள்ளார்.
இதில் புவனேஸ்வரி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் புவனேஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காளியப்பனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.