மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடுக்கல்லூர் பகுதியில் பட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புகுட்டி என்ற மகன் உள்ளார். இவர் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வீரவநல்லூர் பகுதியில் வசிக்கும் உச்சிமாகாளி மகளான அருணா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அருணா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீரவநல்லூரில் அருணா நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சுப்புகுட்டி திடீரென அருணாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்புகுட்டி அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அருணாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் அருணா பலத்த காயமடைந்துள்ளார். இதுபற்றி தகவலறிந்த வீரவநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருணாவை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய சுப்பு குட்டியை கைது செய்துள்ளனர்.