மனைவியை அடித்துக் கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் இளமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் இளமாறன் சரிதாவை பலமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சரிதா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இளமாறன் சரிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சரிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சரிதாவின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து சரிதாவின் உறவினர்கள் இளமாறன் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனைவியை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக இளமாறனை கைது செய்துள்ளனர்.