Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உன்னை இப்படி பண்ணது யார்….? நாடகமாடிய கணவன்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்னிகா, ஹர்சினி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பிரியா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலி, ஒரு ஜோடி கம்மல், வெள்ளி கொலுசு போன்றவையும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அவினாசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர். அதன் முதற்கட்ட விசாரணையில் நகைக்காக பிரியாவை யாரும் கொலை செய்திருக்கலாம் என கூறினர். இந்நிலையில் காவல்துறையினர் பிரியாவின் கணவரான விஜயனிடம் விசாரணை நடத்தினர். அதில் விஜயனின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையில் விஜயன் தனது மனைவி பிரியாவை கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவினாசி காவல்துறையினர் கூறுவதாவது, கடந்த ஒரு வருடமாக விஜயன்-பிரியா இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விஜயன் மது அருந்திவிட்டு பிரியாவிடம் தகராறு செய்துள்ளார்.

மேலும் விஜயன் பிரியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டுளார். இந்நிலையில் வழக்கம்போல் விஜயன் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது விஜயன் அவர் வேலைபார்க்கும் நிறுவனத்திலிருந்து தனது மனைவிக்கு போன் செய்துள்ளார். இதனையடுத்து சுமார் 1 மணி நேரமாக தொடர்ந்து போன் செய்தும் பிரியா எடுக்காததால் விஜயன் அவர் மீது சந்தேகப்பட்டுள்ளார். இதனையடுத்து பிரியா வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயன் வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து வாக்குவாதம் முற்றியதால் விஜயன் பிரியாவை கீழே தள்ளியுள்ளார்.

இதனால் பிரியாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும் விஜயன் தனது வீட்டில் இருந்த பூரி கட்டையால் பிரியாவின் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் விஜயன் துண்டு மற்றும் பெல்டால் பிரியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டுள்ளார். அதன்பின் பிரியாவை நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தது போல் ஏற்பாடு செய்துவிட்டு விஜயன் வணிக நிறுவனத்திற்கு மீண்டும் வேலைக்கு சென்றுள்ளார்.

அதன்பின் விஜயன் அங்கிருந்து அக்கம் பக்கத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரமாக எனது மனைவிக்கு போன் செய்தும் எடுக்காததால் அவரிடம் பேச சொல்லுங்களேன் என கூறியுள்ளார். இதனால் அந்தப் பெண் விஜயனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது மனைவி பிரியா ரத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதாக விஜயனிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த விஜயன் மனைவியின் உடலை பார்த்து அழுவது போல் நடித்துள்ளார். மேலும் பிரியா கழுதில் அணிந்திருந்த நகைகளை அவரது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விஜயனை கைது செய்ததோடு அவரிடமிருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |