Categories
தேனி மாவட்ட செய்திகள்

 கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவர்… இரு உயிரைப் பறித்த பரிதாபம்…!!!

 மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி கற்பகவள்ளி ஆகியோர் வசித்து வந்தனர். மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தவர் மனைவியின் நடத்தையில் சந்தேகமிட்டார். இதை அடுத்து அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் அவரது மனைவியை 6 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் கடந்த 2015ஆம் ஆண்டு சுரேஷ் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது

.இதன் அடிப்படையில் போலீஸார் சுரேஷின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, தற்போது நீதிபதி அப்துல் காதர் குற்றவாளியான சுரேஷிற்கு ரூபாய் 10000 அபராதமும், சாகும்வரை தூக்கு தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

Categories

Tech |