மனைவியை கொன்று விட்டு தற்கொலை நாடகமாடிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதலூர் கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேபி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லோகநாதன் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்வதாக லோகநாதன் நாடகமாடியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் லோகநாதனை கைது செய்துள்ளனர். பின்னர் லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் அதன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லோகநாதனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.