மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கட்டிட தொழிலாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். 2017-ஆம் ஆண்டு ஜெயந்தியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட சந்திரசேகர் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் மரப்பலகையால் தனது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோமரசம்பேட்டை காவல்துறையினர் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த திருச்சி மகளிர் நீதிமன்றம் குற்றவாளியான சந்திரசேகருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.