மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளிமங்கலபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் சுரேஷ் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் லதா சுரேஷிடம் குடும்ப செலவிற்கு பணம் கேட்டுள்ளார்.
அதற்கு சுரேஷ் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து லதாவின் தலையில் தாக்கி இனி பணம் கேட்டால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் காயமடைந்த லதா உடுமலை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து லதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.