குஜராத் மாநிலத்தில் தனது சகோதரியுடன் சண்டையிட்டதால் மனைவியை ஆசிட் குடிக்கச் சொல்லி கணவர் வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அசோக் சவுஹான் மற்றும் ஜெயஸ்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் அசோக் குடும்பத்தினர் ஜெயஸ்ரீயை சிறிய விஷயங்களுக்குக் கூட குற்றபடுத்தி துன்புறுத்தி வருகிறார்கள். திருமணத்தின்போது ஜெயஸ்ரீ பெற்றோர் அவரின் கணவருக்கு வரதட்சணையாக ஒரு பைக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் 8 மாதங்களுக்கு முன்பே வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த பைக்கை சில குரங்குகள் சேதப்படுத்தி விட்டனர்.
அதனால் ஆத்திரமடைந்த அசோக், ஜெயஸ்ரீ பெற்றோர் தரமற்ற பைக்கை தனக்கு கொடுத்து ஏமாற்றி விட்டதாக கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார். இருந்தாலும் ஜெயஸ்ரீ தனக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி நீண்ட நாட்களாக வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் சமீபத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்ததால் ஜெயஸ்ரீ காவல்துறை உதவியை நாடி சென்றுள்ளார். அதன் பிறகு வெளியான தகவலில், ஒரு வாரத்திற்கு முன்பு, ஒரு பாரம்பரிய உடை அணிவதில் அசோக் சகோதரிக்கும், ஜெயஸ்ரீகும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தனது சகோதரியுடன் சண்டை போட்டதால் ஆத்திரமடைந்த அசோக், தனது மனைவியை இரக்கமின்றி அடித்து வயிற்றிலேயே உதைத்துள்ளார். அதுமட்டுமன்றி ஆசிட்டை குடிக்க சொல்லி வற்புறுத்தி அதுமட்டுமல்லாமல், வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளார். வயிற்று எரிச்சல் தாங்க முடியாத ஜெயஸ்ரீ தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் அசோக் வயிற்றிலேயே எட்டி உதைத்து அடித்துள்ளார். ஜெயஸ்ரீயின் பரிதாப நிலையைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் தனது கணவர் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.