Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் கள்ளக்காதல்…. கணவனின் வெறிச்செயல்…. ஆட்சியரின் உத்தரவு….!!

சிறையிலிருக்கும் வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திடீரென காணாமல் போனதால் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சுந்தரமூர்த்தியை தேடி வந்தனர். இந்நிலையில் சுந்தரமூர்த்தி உடல் அழுகிய நிலையில் டாஸ்மாக் கடை பின்புறம் சடலமாக கிடந்துள்ளார்.

அதன்பின் அவரை ஐயப்பன் என்பவர் கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தனது மனைவியிடம் கள்ளக்காதல் வைத்திருந்ததால் சுந்தரமூர்த்தியை கொலை செய்ததாக ஐயப்பன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஐயப்பனின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு சக்திகணேசன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவின் பேரில் ஐயப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் ஐயப்பனிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

Categories

Tech |