பிரபல சீரியல் நடிகை அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பகல் நிலவு’ சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த சீரியலில் நடித்த அசீம் மற்றும் ஷிவானி இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் . இந்த சீரியலுக்குப் பின் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் அதிக அளவு பிரபலமடைந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அசீம் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை .
இந்நிலையில் நடிகர் அசீம் சமூக வலைத்தள பக்கத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் ‘அனைவருக்கும் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன் . நாங்கள் சட்டப்படி பிரிந்து விட்டோம் . எங்கள் இருவரின் பரஸ்பர விருப்பத்தின் பேரில் நீதிமன்றத்தால் விவாகரத்து செய்ய பட்டிருக்கிறோம் . தயவுசெய்து எங்கள் திருமண நிலை குறித்து எந்த ஒரு தனிப்பட்ட கேள்விகளும் கேட்க வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார் .