குளத்தில் மண் அள்ளிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருங்குளம் பகுதியில் பூந்தொட்டி குளத்தில் சிலர் சட்ட விரோதமாக மண் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்தில் மண் அள்ளி கொண்டிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
இதனையடுத்து காவல்துறையினர் தப்பி ஓட முயன்ற ஒருவரை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 4 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.