சட்டவிரோதமாக மணல் அள்ளியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நட்டாத்தி ஓடை பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக சாயர்புரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சாயர்புரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நட்டாத்தி ஓடை பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பாளையங்கோட்டை மணக்கரை பகுதியில் வசிக்கும் செல்லத்துரை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சாயர்புரம் காவல்துறையினர் செல்லத்துரையை கைது செய்ததோடு மணல் அல்ல பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.