மணல் கடத்த முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆரம்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற லாரியை அவர்கள் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் லாரியில் ஆந்திராவில் இருந்து 10 யூனிட் மணல் கடத்த முயன்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆரம்பாக்கம் காவல்துறையினர் லாரி டிரைவரான ஆந்திர மாநிலத்திலுள்ள நெல்லூர் பகுதியில் வசிக்கும் மணிபாபு, கிளீனர் ரவி ஆகியோரை கைது செய்ததோடு லாரியையும் பறிமுதல் செய்தனர்.