Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த ஏட்டு…. லாரி ஏற்றி கொல்ல முயன்ற நபர்…. கடலூரில் பரபரப்பு….!!

மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது காவல்துறை ஏட்டுவின் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து வாகனங்கள் மூலமாக மணல் கடத்துவதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சக்தி கணேசன், தனிப்படை காவல்துறையினரை தொடர்பு கொண்டு கொடியலம் ஆற்றுக்கு சென்று கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் மற்றும் புதுப்பேட்டை காவல்நிலையத்தில் ஏட்டாக வேலை பார்க்கும் சங்கர் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனங்களில் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அதன்பின் காவல்துறையினரை கண்டதும் ஓட்டுனர் லாரியை வேகமாக இயக்கி உள்ளார். இதனை அறிந்த ஏட்டு சங்கர் லாரியை துரத்தி சென்று தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.

இருப்பினும் லாரியின் ஓட்டுனர் காவல்துறை ஏட்டு சங்கரின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமால் சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஏட்டு சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏட்டு மீது மோதி விட்டு மணலை கடத்திச் சென்ற லாரி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |