சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள சின்னாலப்பல்லி ஆற்றுப் பகுதியில் குடியாத்தம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் காரை ஓட்டி வந்த நபர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். அதன்பின் காவல்துறையினர் காரை சோதனை செய்தனர்.
அப்போது காரில் சட்ட விரோதமாக ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கர்நாடக பதிவெண் கொண்ட அந்த காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.