Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மணல் கடத்தல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி காவல்துறையினர் மணல் கடத்தல் தொடர்பாக பனப்பாக்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்காளம்மன் கோவில் அருகாமையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 2 நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

பின்னர் அவர்களை விசாரணை நடத்திய போது லோகநாதன் மற்றும் மணி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த காரணத்தால் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மணல் மற்றும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |