சட்ட விரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள சிற்றாற்றில் மாட்டு வண்டியில் ஒருவர் சட்ட விரோதமாக மணல் கடத்தி கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அங்கு சென்று மணல் கடத்தியவரிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் வெங்கடாசலபுரம் பகுதியில் வசிக்கும் ராமர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராமரை கைது செய்ததோடு அவரிடமிருந்த மணல் மற்றும் மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.