மணல் கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரணமல்லூர் பகுதியில் காவல்துறையினர் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாட்டு வண்டி ஓட்டி வந்தவரை கைது செய்ததோடு, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.