மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதன்பின் வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதைப் பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று மாட்டு வண்டிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த சக்திவேல், ஆறுமுகம் மற்றும் கோவிந்தன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.