இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள வாகையூரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி சென்ற முத்துவேல் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் ஆ.பாளையம் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி வந்த மணிமாறன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.