மாட்டு வண்டியில் மணல் கடத்தி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பணங்குப்பம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மாட்டுவண்டியில் சென்றவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் மணல் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் விஜயகுமார், சீனிவாசன் மற்றும் சத்தியநாதன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.