பொக்லைன் எந்திரத்தின் மூலம் டிராக்டரில் மணல் கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்ததில் பொக்லைன் எந்திரம் மூலம் நடுவலூர் பெரிய ஓடையிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் சுத்தமல்லி பகுதியில் வசிக்கும் பொக்லைன் எந்திர டிரைவரான ராமச்சந்திரன் என்பதும் மற்றொருவர் டிராக்டர் டிரைவரான இராஜேந்திரன் என்பதும் தெரியவந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராமச்சந்திரன் மற்றும் இராஜேந்திரனை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.