சட்ட விரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் இருந்து சிலர் மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மணல் கடத்திய சரத்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த மாட்டுவண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.