சட்டவிரோதமாக மணல் கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணி டிராக்டரில் மணல் ஏற்றி கொண்டு கீரனூர் சாலை பகுதியில் சென்றுள்ளார். அப்போது அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் டிராக்டரில் மணல் கொண்டு சென்ற மணியை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து மணி உரிய அனுமதி இன்றி டிராக்டரில் மணலை கடத்திச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மணியை கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணியிடம் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.