மணல் கடத்திய குற்றத்திற்காக லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்வாய்க்கரை கிராம நிர்வாக அதிகாரியான ராஜகுரு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதன் பிறகு உரிய அனுமதியின்றி மணல் கடத்தியது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து லாரி டிரைவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது லாரி டிரைவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து அதிகாரிகள் லாரிகளை பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய லாரி டிரைவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.