நம் மனம் அழுத்தத்தினால் பாதிக்கும் காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:
மன அழுத்தம் ஒரு பெரிய மனிதனை கூட நிம்மதி இல்லா வாழ்வில் தள்ளி விடுகிறது. உயிர் விடும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகிறது. வாய்விட்டு வெளியே சொல்லமுடியாத அளவுக்கு இருக்கும் பிரச்சனை அதிக படியான மனஅழுத்தத்திற்கு ஆளாக்குகிறது.
ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும்.
இந்த அதிகப்படியான சக்தியும் வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும். ஆனால், இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால், அது மன அழுத்தமாக மாறிவிடும்.
உடல் அல்லது உயிருக்கு ஆபத்து:
உடல் அல்லது உயிருக்கு ஆபத்தை உணரும்போது இந்த வகையான மன அழுத்தம் ஏற்படுகிறது.
கவலை:
நம் கட்டுப்பாட்டுக்குள் வராத விஷயங்கள் குறித்துக் கவலைப்படுவது. பதட்டமும் அவசரமும் நிறைந்த வாழ்க்கை முறையால் பொதுவாக இப்படி நேர்கிறது.
சுற்றுப்புறச் சூழ்நிலை:
சப்தம், கூட்டம், குடும்பம் மற்றும் தொழில் நெருக்கடிகளால் நேர்வது.
அதிக வேலைப்பளு:
இந்த வகையான மன அழுத்தம் உடலை மிகவும் பாதிக்கும். கூடுதல் பணிச்சுமை ஏற்படும்போது இது நிகழ்கிறது. பணிகளை எப்படிச் சீரமைத்துக்கொள்வது, எப்படி ஓய்வுக்கு நேரம் ஒதுக்குவது என்று தெரியாதபோது இந்த வகை மன அழுத்தம் நேரும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள் உடல், மற்றும் மனதளவில் வெளிப்படுகிறது. மன அழுத்தத்தின் வீரியம் நபருக்கு நபர் வேறுபடும்.
மனதளவில் வெளிப்படும் அறிகுறிகள்:
பதட்டம், எரிச்சல், மனம் ஒருமுகப்படுத்த முடியாதது, அதிகக் களைப்படைவது, தூக்கமின்மை.
உடலளவில் வெளிப்படும் அறிகுறிகள்:
வாய் உலர்ந்துவிடுவது, மூச்சுவிடுவதில் சிரமம், அஜீரணக் கோளாறு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உள்ளங்கை வேர்ப்பது, இருதயம் வேகமாகத் துடிப்பது, உடல் தசைகள் இறுகுவது.