கேரளாவில் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் ஊரடங்கு கட்டுப்பாடுக்கு முன்பாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பல தடைப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில் தம்பதி ஒருவருக்கு இன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்பொழுது மணமகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை ஆலப்புலா மெடிக்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் நிச்சயக்கப்பட்ட நாளில் திருமணம் நடைபெற வேண்டுமென்று உறுதியாக இருந்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சி தலைவரிடம் மணமகனை திருமணம் செய்வதற்கு அனுமதி வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டது. எனவே மணமகளின் நிலைமையை மனதில் கருதி ஆட்சித் தலைவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.அதன் பிறகு மணமகள் பிபிஈ கிட் அணிந்து மருத்துவமனைக்கு திருமணம் செய்து கொள்வதற்கு வந்துள்ளார்.இந்த கடுமையான சூழ்நிலையிலும் மணமகளின் உறுதியைப் பாராட்டி இருவருக்கும் மருத்துவமனையிலேயே திருமணம் நடத்தப்பட்டது.