முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடகுடி கிராமத்தில் முதியவர் தங்கராஜ் வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களாக தங்கராஜ் மனமுடைந்து இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தங்கராஜ் தன் மகள் மாரியம்மாளை பார்க்க மருதுவஞ்சேரி சென்றார். இதனையடுத்து ஒத்தங்கரை ஆற்றங்கரை ஓரம் உள்ள ஒரு மரத்தில் முதியவர் தங்கராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதியவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.