Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் உரம் கலந்த தண்ணீரை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்வானம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விநாயகம் என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் விநாயகம் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அதன்பின் தனது நோய்க்கு சிகிச்சை பெற்று மருத்துவர்கள் அளித்த மாத்திரையை சாப்பிட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து விவசாயத்திற்காக தண்ணீரில் உரம் கலந்து வைத்திருந்ததை அறியாமல் அதை குடிநீர் என நினைத்து விநாயகம் அருந்தியுள்ளார். இதனால் அவருக்கு வயிற்றில் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விநாயகத்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விநாயகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |