மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புகையிலை தோட்டப் பகுதியில் உதய பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போய்விட்டார். அதன்பின் உறவினர்கள் பல பகுதிகளில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதனையடுத்து வீட்டின் பின்புறம் இருக்கும் கிணற்றில் உதய பாரதி இறந்து சடலமாக கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உதய பாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.