Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. தஞ்சையில் பரபரப்பு….!!

வீட்டில் ஏற்பட்ட தகராறில் மகனே தாய் கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அண்ணலக்ரகாரம் ரம்யா நகரில் சந்திரசேகர்-சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு பழனி உட்பட 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் பழனி தவிர அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் பழனிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய பழனி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து பழனியின் தந்தை சந்திரசேகர் இறந்துவிட்டார். இதன் காரணமாக தாய் சரஸ்வதியும், பழனியும் மட்டும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட பழனி அடிக்கடி தாயுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த பழனி தாயின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு எதுவும் தெரியாதது போல் வீட்டில் உறங்கியுள்ளார். அதன்பின் மறுநாள் காலை பழனி அருகில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று தாயை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின்படி டி.எஸ்.பி. அசோகன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரஸ்வதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.

Categories

Tech |