விஷம் குடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அதம்பாவூர் மேல தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் அன்பழகன் சமீபகாலமாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த 20-ஆம் தேதி அன்பழகன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அன்பழகனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் அன்பழகன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அன்பழகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.