Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தள்ளி வைக்கப்பட்ட திருமணம்…. மணப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணம் தள்ளி வைக்கப்பட்டதால் மணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாணிக்காபுரம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மலர்விழி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கந்தசாமி இறந்துவிட்டதால் ஜானகியும் அவருடைய மகள் மலர்விழியும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மலர்விழிக்கு திருமண ஏற்பாடுகளை அவருடைய சித்தப்பா செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து மலர்விழிக்கும் திருப்பூரில் வசிக்கும் ஒருவருக்கும் சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடைய திருமணத்தை வருகிற மார்ச் மாதம் சுபமுகூர்த்த தினத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மலர்விழிக்கு திருமண ஏற்பாடு செய்த சித்தப்பாவின் தாயார் திடீரென இறந்துவிட்டார். இதனால் மலர்விழியன் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரது வீட்டில் சாப்பிட்டுவிட்டு அனைவரும் தூங்க சென்றனர். இதனையடுத்து மலர்விழியும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அதன் பின் காலையில் எழுந்து பார்த்தபோது மலர்விழி வீட்டில் காணவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து மலர்விழியை அக்கம்பக்கத்தில் தேடினர்.

ஆனால் எங்கு தேடியும் மலர்விழியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் தோட்டத்து கிணற்றில் பார்த்தபோது அதில் மலர்விழி பிணமாக மிதந்து கொண்டிருந்ததை குடும்பத்தினர்  பார்த்து  அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலர்விழியின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மலர்விழி திருமணம் தள்ளி வைக்கப்பட்டதால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |