Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திருமணத்தில் விருப்பமில்லை”… அதான் இப்படி பண்ணினேன்… விரக்தியில் பெற்றோர்..!!

திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மணப்பெண் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில்  உள்ள போத்தனூர் பகுதியை  சேர்ந்த 18 வயது இளம் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் இன்று திருமணம் செய்வதாக அவரது பெற்றோர்கள் நிச்சயித்தனர் . அதன் படி இன்று திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெண்ணின் பெற்றோர்கள் செய்து கொண்டிருந்தனர். நேற்று காலையில் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக  மணப்பெண் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர் வீட்டிற்கு சென்ற தேடி பார்த்துள்ளனர். ஆனால் மணப்பெண் அங்கு இல்லை.

இதனைத்தொடர்ந்து மணப்பெண்ணை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில்  வீட்டிலிருந்த கல்வி மாற்று சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு  மணப்பெண் வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணப்பெண்ணிடம் பேசுவதற்காக  அவரது பெற்றோர்  செல்போனில் தொடர்பு தொடர்பு கொண்டனர். ஆனால் அந்த பெண்  போனை எடுக்கவில்லை. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் .

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு மயமான மணப்பெண்ணை தேடி வந்தனர். பின்னர்  மணப்பெண்ணின் செல்போனுக்கு காவல்துறையினர் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது மணப்பெண் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் பொள்ளாச்சியில் உள்ள தனது தோழியின் வீட்டில் தங்கியிருப்பதாகவும்  அவர் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறையினர் பெண்ணின் பெற்றோருடன் அங்கு சென்ற பெண்ணை மீட்டனர். மேலும் காவல் நிலையத்தில் வைத்து சமாதானம் செய்து பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மணப்பெண்ணிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியதால் அவரது பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர்.

Categories

Tech |